# நீலத் திமிங்கிலம் எவ்வளவு நீளத்துக்கு இருக்கும்? கிட்டத்தட்ட ஒரு போயிங் விமானத்தின் நீளத்துக்கு இருக்கும். எடையோ 180 டன் இருக்கும். நன்றாக வளர்ந்த திமிங்கிலங்கள் தினந்தோறும் சராசரியாக 3600 கிலோ எடையுள்ள நீர்வாழ் உயிரினங்களைச் சாப்பிட்டு வாழ்கின்றன. சாதாரணமாக மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் நீலத் திமிங்கிலம் நீந்தும். தேவைப்பட்டால் இன்னும் வேகமாகவும் நீந்தும்.
# கொம்பெலும்பு என்ற திமிங்கிலத்துக்கு (Baleen whale) பற்கள் கிடையாது. கொம்பு எலும்பு இதன் அடையாளம்.
# ஸ்பெர்ம் திமிங்கலத்தின் (Sperm whale) தலை சதுர வடிவில் இருக்கும். இவற்றின் நீண்ட மூக்குப் பகுதியில் ஸ்பெர்மாஸெட்டி எனும் வெள்ளை மெழுகு உள்ளது. அந்த மெழுகிற்காக இந்தத் திமிங்கிலங்கள் வேட்டையாடப்படுகின்றன. இவை 15 முதல் 20 வரை திமிங்கிலங்கள் கொண்ட மந்தையாக வாழும் பண்புடையவை.
# திமில் முகுதுத் திமிங்கிலங்களுக்கு (Humpback Whale) நீண்டத் துடுப்புகள் இருக்கும். அதிக ஒலி ஏற்படுத்தக்கூடிய திமிங்கிலங்களில் இதுவும் ஒன்று. ஒரே சமயத்தில் 35 நிமிடங்கள் வரைகூட இந்த ஒலியை ஓயாமல் எழுப்பும். துள்ளுவது, குட்டிக் கரணம் போடுவது போன்ற வித்தைகளையும் செய்யும்..
# சேய் திமிங்கலம் (Sei Whale) சராசரியாக 19 மீட்டர் நீளத்திலும் 28 டன் எடையிலும் இருக்கும். ஆர்க்டிக் பெருங்கடல் முதல் அண்டார்டிக் கடல் வரை எல்லாக் கடல்களிலும் காணப்படுகின்றன.
# மூர்க்கத் திமிங்கலத்துக்கு (Killer Whales) ஆர்கா என்ற இன்னொரு பெயரும் உண்டு. சீல்களையும் பிற திமிங்கிலங்களையும் கொல்லக்கூடிய சக்தி கொண்டது. மனிதர்களிடம் சாந்தமாக நடந்துகொள்ளும் இவற்றைப் பிடித்துக் கடல்சார் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பயன்படுத்துகிறார்கள்.
தகவல் திரட்டியவர்: பி. தினேஷ், 10-ம் வகுப்பு,
அரசினர் உயர்நிலைப் பள்ளி, ராமநாதபுரம்.