மாயா பஜார்

துளசி மாடம் - நீங்களே செய்யலாம்

செய்திப்பிரிவு

தேவையான பொருட்கள்

இங்க் பாட்டில் அட்டை, பல வண்ண மார்பிள் பேப்பர், கலர் பேப்பர், பசை, கத்தரிக்கோல், ஸ்கெட்ச் பேனா.

செய்முறை:

1.இங்க் பாட்டிலின் அட்டையை கலர் பேப்பரால் சுற்றவும். மேல் பாகத்தில் சிறிய துவாரம் அமைக்கவும்.

2.செவ்வக வடிவ பழுப்பு நிற மார்பிள் பேப்பரை படத்தில் காட்டியிருப்பது போல நான்கு சம பாகங்களாகப் பிரிக்கவும். கோடுகள் வரைந்து வண்ணமிட்ட பகுதியைக் கத்தரித்துவிட்டு, சுருட்டவும்.

3.6 செ.மீ அகலமும் 10 செ.மீ நீளமும் கொண்ட பச்சை நிற மார்பிள் பேப்பரை எடுத்துக் கொள்ளவும். படத்தில் காட்டியிருப்பது போல செங்குத்தான இழைகளாகக் கத்தரிக்கவும்.

4.வெட்டப்படாத மேல் பாகத்தைச் சுருட்டி, ஒட்டவும். வெட்டப்பட்ட இழைகளைப் படத்தில் காட்டியிருப்பது போல விரிக்கவும்.

5.பல வண்ண மார்பிள் பேப்பர்களில் இருந்து சின்னச் சின்ன வட்டங்களை பஞ்ச் செய்து எடுக்கவும். அவற்றை வெட்டப்பட்டிருக்கும் பச்சை நிற நுனிகளில் பூக்களைப் போல ஒட்டவும்.

6.இதை இங்க் பாட்டில் அட்டையில் உள்ள துவாரத்தில் வைக்கவும்.

7.ஏற்கனவே சுருட்டி வைத்திருக்கும் பழுப்பு நிற மார்பிள் பேப்பரின் வளைவு டிசைன் மேல் பக்கம் வருவதுபோல அட்டையைச் சுற்றி ஒட்டவும்.

8.தொட்டியைச் சுற்றி உங்களுக்குப் பிடித்த மாதிரி அலங்கரித்தால், வண்ணமிகு துளசி மாடம் தயாராகிவிடும்.

SCROLL FOR NEXT