மாயா பஜார்

ஊர்ப் புதிர் 13: கண் தானத்தில் சிறந்த நாடு!

ஜி.எஸ்.எஸ்

கீழே உள்ள 10 குறிப்புகள் ஒரு குறிப்பிட்ட நாட்டைக் குறிக்கின்றன. அந்த நாடு எது என்று கண்டுபிடியுங்கள்.

1. இந்த நாட்டின் தேசிய விளையாட்டு வாலிபால்.

2. இது ஒரு தீவு.

3. ஆங்கிலேயர்களிடமிருந்து 1948 பிப்ரவரி 4 அன்று சுதந்திரம் பெற்றது.

4. கண்தானத்தில் முன்னணியில் இருக்கும் நாடு.

5. இந்த நாட்டில் வசிப்பவர்களில் 70 சதவீதம் பேர் புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள்.

6. தேயிலை ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கும் நாடுகளில் ஒன்று.

7. இந்த நாட்டின் தேசியக் கொடியில் சிங்கம் உண்டு.

8. ராமாயணத்தில் இடம்பெறும் ராவணன் ஆட்சி செய்த நாடு.

9. உலகின் முதல் பெண் பிரதமர் இந்த நாட்டைச் சேர்ந்தவர்.

10. அனுராதபுரம் இந்த நாட்டின் பண்டைய தலைநகரம்.

SCROLL FOR NEXT