மாயா பஜார்

உலகின் பிரம்மாண்ட டெலஸ்கோப்!

செய்திப்பிரிவு

பள்ளிக்கூடங்களில் சிறிய டெலஸ்கோப்பைப் பார்த்திருப்பீர்கள். குட்டியூண்டி பொருளைக்கூட மிகப் பெரிதாகக் காட்டும் டெலஸ்கோப்பைப் பார்ப்பதென்றால் சிறுவர் சிறுமிகளுக்கு ரொம்பவும் ஆசைதான். உலகிலேயே மிகவும் பிரம்மாண்டமான டெலஸ்கோ எங்கே இருக்கிறது தெரியுமா?

ஜப்பானில் மவுனா கீ என்ற மலைப் பகுதி உள்ளது. இந்த மலையில் சுபாரு என்ற பெயரில் டெலஸ்கோ உள்ளது. இதுதான் உலகிலேயே மிகப் பெரியது. இந்த டெலஸ்கோப்பைக் கடந்த 1999-ம் ஆண்டு வைத்தார்கள். இப்போது இதைவிட மிகப் பெரிய டெலஸ்கோ ஒன்றை அதே இடத்தில் வைக்கப் போகிறார்கள். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை அமெரிக்கா, சீனா, ஜப்பான், கனடா மற்றும் இந்தியா ஆகிய 5 நாடுகள் இணைந்து அமைக்கிறார்கள்.

மவுனா கீ மலையில் 4,012 மீட்டர் உயரத்தில் புதிய டெலஸ்கோப்பை வைக்கப் போகிறார்கள். இது ஏற்கனவே உள்ள சுபாரு டெலஸ்கோப்பைவிட 13 மடங்கு பெரியதாம். மிகத் தொலைவில் உள்ள நட்சத்திரங்களையும்கூட இந்த டெலஸ்கோ மிகவும் தெளிவாகக் காட்டுமாம். இந்த டெலஸ்கோ அமைக்கும் பணி 2022-ம் ஆண்டில் முடிகிறது. அதன் பிறகு இந்த டெலஸ்கோப்தான் உலகிலேயே மிகப் பெரிய டெலஸ்கோ என்ற பெருமையைப் பெறப் போகிறது. அதற்கு இன்னும் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

தகவல் திரட்டியவர்: எஸ். பிரபாகர், 8-ம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, வீரபாண்டி, சேலம்.

SCROLL FOR NEXT