மாயா பஜார்

மாம்பழத்துக்குள் வண்டு வருவது எப்படி?

செய்திப்பிரிவு

மாம்பழத்துக்குள் வண்டு பார்த்திருக்கிறீர்களா? அந்த வண்டு மாம்பழத்துக்குள் எப்படி வந்தது? முழுதாக மூடியுள்ள மாம்பழத்துக்குள் அது உயிர் வாழ்வது எப்படி?

உண்மையில் மாம்பழத்தின் உள்ளே வண்டு புகுவது கிடையாது. மாம்பூ பருவத்தில் இருக்கும்போது அதில் வண்டு முட்டை இட்டுவிடும். மாம்பூ காயாகி, கனியாக மாறும். அதற்குள் அந்தப் பூவுக்குள் இருந்த முட்டையும் தன் அடுத்தடுத்த பருவத்தை முடித்துக்கொண்டு சிறிய வண்டாக மாறியிருக்கும்.

அதெல்லாம் சரி, மாம்பழம் முழுவதுமாக மூடியிருக்கும்போதும். அதற்குள் உள்ள வண்டு எப்படி வாழ்கிறது? சுவாசித்தல் என்பது உணவுப் பொருளைச் சிதைத்து ஆற்றலை உற்பத்தி செய்யும் ஒரு செயலியல் நிகழ்வுதான். இந்த உதாரணம் வண்டுக்கு ரொம்ப பொருந்தும். சில செயல்கள் ஆக்ஸிஜன் உதவியுடனும் சில நேரங்களில் உதவியில்லாமலும் நடக்கும். மாம்பழத்துக்குள் உள்ள வண்டு ஆக்ஸிஜன் உதவியில்லாமலேயே பழச் சர்க்கரையைச் சிதைக்கிறது. இதிலிருந்து கிடைக்கும் சக்தியைக் கொண்டு அது வாழ்கிறது.

ஒரு வேளை மாம்பழத்தை யாரும் சாப்பிடவில்லையென்றால் வண்டு என்னா ஆகும்? ஒன்றும் ஆகாது. எப்படியும் அடுத்த சில நாட்களில் மாம்பழம் அழுகிவிடும். அப்போது வண்டு சாதாரணமாக வெளியே வந்துவிடும்.

தகவல் திரட்டியவர்: கே. பரணிகுமார்,
8-ம் வகுப்பு, பொன்னையா மேல்நிலைப் பள்ளி,
திருச்சி.

SCROLL FOR NEXT