மாயா பஜார்

வால்நட் எலி

செய்திப்பிரிவு

தேவையான பொருட்கள்:

பாதியாக உடைத்த வால்நட் ஓடு, வால்நட் ஓட்டுக்குள் பொருந்துகிற அளவில் ஒரு ஆல்மண்ட் கொட்டை, வெல்வெட் அட்டை (ஃபெல்ட்), பசை, கத்தரிக்கோல், கறுப்பு மார்க்கர்.

செய்முறை:

1.வால்நட் ஓட்டைச் சுத்தம் செய்யவும். ஆல்மண்ட் கொட்டையின் ஒரு பக்கம் பசையைத் தடவி, அதை வால்நட் ஓட்டினுள் ஒட்டவும்.

2.ஆல்மண்ட் கொட்டையின் மேல்பகுதியில் படத்தில் காட்டியிருப்பது போல எலியின் முகத்தை வரையவும்.

3.வெல்வெட் அட்டையில் எலியின் காதுகள், வால் ஆகியவற்றை வரைந்து, வெட்டவும். காதுகளை ஓட்டின் உள்ளேயும், வாலை ஓட்டின் கீழேயும் ஒட்டவும்.

4.வெல்வெட் அட்டையில் அரைவட்டத்தை வரைந்து வெட்டவும். அதை ஆல்மண்ட் கொட்டையின் மையப்பகுதியைச் சுற்றி பெட்ஷீட் போல ஒட்டவும்.

5.வால்நட் ஓட்டுக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் இந்த அழகான எலிகளைப் போல நிறையச் செய்து ஷோ கேஸில் வைக்கலாம்.

SCROLL FOR NEXT