மாயா பஜார்

தேனீ செய்ய ஆசையா?

செய்திப்பிரிவு

தோட்டத்தில் ரீங்காரமிட்டுப் பறக்கும் தேனீயைப் பார்த்திருக்கிறீர்களா? அந்தத் தேனீயை நீங்கள் வீட்டிலேயே செய்ய ஆசையா? சில பொருள்கள் இருந்தால் போதும், அழகான தேனீயைச் செய்து மகிழலாம்.

தேனீ செய்ய ஆசையா?

தேவையான பொருள்கள்:

மஞ்சள் & கறுப்பு களிமண், எக்ஸ்ரே ஃபிலிம், குண்டூசி, கம்பி

செய்முறை:

1 சிறிது களிமண்ணை எடுத்து உங்கள் கைகளில் வைத்து நன்கு உருட்டிக்கொள்ளுங்கள்.

2 படத்தில் காட்டியுள்ளபடி நான்கு வடிவங்களை உருவாக்கிக்கொள்ளுங்கள். பின்னர் கறுப்பு களிமண் உதவியால் தேனியின் கண்களை உருவாக்குங்கள்.

3 இவற்றை ஒன்று சேர்த்து தேனீயின் உடம்பை உருவாக்கிக்கொள்ளுங்கள்.

4 இப்போது இரண்டு இறக்கை வடிவங்களை எக்ஸ்ரே ஃபிலிமிலிருந்து வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.

5 இறக்கைகளை உடம்புடன் பொருத்திக்கொள்ளுங்கள். குண்டூசியை வளைத்து அதை இறக்கைகள் இரண்டுக்கும் நடுவில் சொருகிக்கொள்ளுங்கள். கம்பி ஒன்றை குண்டூசியின் தலைப்பகுதியில் கட்டித் தொங்கவிடுங்கள். இப்போது காற்றடிக்கும்போது இறக்கைகளை அசைத்து தேனீ ஆடும் காட்சி அது பறப்பது போலவே இருக்கும்.

SCROLL FOR NEXT