மாயா பஜார்

பறக்கும் அணில்!

செய்திப்பிரிவு

வட அமெரிக்காவில் வசிக்கும் ஒரு வகை அணிலைப் பறக்கும் அணில் என்றே அழைக்கிறார்கள். இதன் விலங்கியல் பெயர் கிளாவ்கோமிஸ் சாப்ரினஸ். இது 10 முதல் 12 அங்குலம் வரை நீளம் கொண்டது. விதைகள், பழங்கள், காளான்கள், சிறு பூச்சிகள் ஆகியவற்றைச் சாப்பிட்டு வாழ்கிறது. பறவைகள் பறப்பதைப் போல இந்த அணிலால் பறக்க முடியாது. ஆனால், ஒரு மரத்தில் இருந்து இன்னொரு மரத்துக்குக் காற்றில் மிதந்தபடியே தாவ முடியும்.

இதன் கால்களை ஒரு சவ்வுத் தோல் இணைக்கிறது. அதன் உதவியால் கொஞ்ச தூரம் பறக்க முடிகிறது. ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குக் கால்களை விரைப்பாக நீட்டிப் பாய்வதைப் பார்க்கும்போது பட்டம் பறப்பதைப் போலவே இருக்கும்.

தகவல்திரட்டியவர்: பா. ஆதித்யா, 6-ம் வகுப்பு, ஸ்ரீ நாராயண குரு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம்.

SCROLL FOR NEXT