மாயா பஜார்

கவனமா இருக்கணும்! - குழந்தைப் பாடல்

செய்திப்பிரிவு

அதிர வெடிக்கும் அணுகுண்டு

பொறியாய் பறக்கும் புஸ்வானம்

பெரிதாய் வெடிக்கும் லட்சுமிவெடி

பூவாய்ப் பொரியும் மத்தாப்பு

தொடர்ந்து வெடிக்கும் சரவெடி

விட்டுவிட்டு வெடிக்கும் பொட்டுவெடி

இத்தனை வெடியும் வெடிக்கத்தான்

இனிதே வருது தீபாவளி!

வெடியை வெடிக்கும் தம்பியே

விரும்பி வெடிக்கும் தங்கையே

கவனமா நீயும் வெடிக்கணும்

கையில் வைத்துக் கொளுத்தாம

எட்ட நின்றே கொளுத்தணும்

வெடிக்கும் வெடியின் ஓசைதான்

நாள் முழுதும் கேட்க ஆசைதான்!

-ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

SCROLL FOR NEXT