மாயா பஜார்

ஊர்ப் புதிர் 12: ஆறுகள் இல்லாத நடு

ஜி.எஸ்.எஸ்

கீழே உள்ள 10 குறிப்புகள் ஒரு நாட்டைக் குறிக்கின்றன. அந்த நாடு எது என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!

1. அரேபிய வளைகுடா நாட்டின் மிகப் பெரிய நாடு.

2. உலகில் அதிக அளவு பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்று.

3. ஆறுகள் இல்லாத நாடு.

4. 2015-ம் ஆண்டிலிருந்து சல்மான் பின் அப்துலாஜிஸ் அல் சவுத் மன்னராக இருக்கிறார்.

5. இதன் நாணயத்தைக் குறிப்பிட்டால் இந்த நாட்டின் பெயரின் முதல் பகுதி தெரிந்து விடும்.

6. இதன் அதிகாரபூர்வ மொழி அராபிக்.

7. பெண்களுக்கு அதிகக் கட்டுப்பாடுகள் உண்டு.

8. ஒட்டகச் சந்தை இங்கே மிகப் பிரபலம்.

9. ஜமாரத் பாலம் ஹஜ் பயணத்தில் பயன்படுத்தப்படுவதால் மிக முக்கியமானது.

10. உலகின் மிகப் பிரபலமான இரு புனிதப் பள்ளிவாசல்கள் இங்குள்ளன.

SCROLL FOR NEXT