மாயா பஜார்

குழந்தைப் பாடல்: வாழை மரம்!

அழ. வள்ளியப்பா

வாழை மரம், வாழை மரம்

வழ வழப்பாய் இருக்கும் மரம்.

சீப்புச் சீப்பாய் வாழைப்பழம்

தின்னத் தின்னக் கொடுக்கும் மரம்

பந்தி வைக்க இலைகளெலாம்

தந்திடுமாம் அந்த மரம்.

காயும் பூவும் தண்டுகளும்

கறி சமைக்க உதவும் மரம்.

கல்யாண வாசலிலே

கட்டாயம் நிற்கும் மரம்!

SCROLL FOR NEXT