1. காவி உடையணியாத துறவி, கரையோரம் கடுந்தவம் செய்கிறான். அவன் யார்?
2. காற்று இல்லாத கூண்டில் மஞ்சக் கோழி மயங்கி கிடக்குது. அது என்ன?
3. காலில்லாதவன் வளைவான், நெளிவான், காடு மேடெல்லாம் அலைவான். அவன் யார்?
4. காலைக் கடிக்கும் செருப்பும் இல்லை; காவல் காக்கும் நாயும் இல்லை. அது என்ன?
5. காலையில் ஊதும் சங்கு, கறி சமைக்க உதவும். அது என்ன?
6. காலில்லா பந்தலைக் காணக் காண சந்தோஷம். அது என்ன?
7. வண்ணப் பட்டுச் சேலைக்காரி; நீல வண்ண ரவிக்கைக்காரி. அது என்ன?
8. நான் வெட்டுப்பட்டால், வெட்டியவன் தேம்பி அழுவான். நான் யார்?
9. வித்தில்லாமல் விளையும்; வெட்டாமல் சாயும். அது என்ன?
விடைகள் :
1. கொக்கு 2. முட்டை 3. பாம்பு 4. முள் 5. சேவல் 6. வானம் 7. மயில் 8. வெங்காயம் 9. வாழை
- ஏ. ஏ.மகேஷ்வரி, 6-ம் வகுப்பு,
அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, துறையூர்.