வித்தியாசம் கண்டுபிடி
இரு படங்களுக்கும் இடையே உள்ளன. பத்து வித்தியாசங்கள் கண்டுபிடியுங்களேன்!
கண்டுபிடி
யார் யார் எந்தெந்த சறுக்குப் பாதையில் வருவார்கள்? கண்டுபிடித்துச் சொல்கிறீர்களா?
விடுகதை
1. எங்கக்கா சிவப்பு, குளித்தால் கறுப்பு. அவள் யார்?
2. நெருப்புப் பட்டால் அழுவான். அவன் யார்?
3. கனத்த பெட்டி, கதவைத் திறந்தால் மூட முடியாது. அது என்ன?
4. கொடுக்க முடியும்; எடுக்க முடியாது. அது என்ன?
5. நனைந்தாலும் நடுங்க மாட்டான். அவன் யார்?
6. அனலில் பிறந்தவன் ஆகாயத்தில் பறக்கிறான். அவன் யார்?
7. தாழ்ப்பாள் இல்லாத கதவு, தானாக மூடித் திறக்கும் கதவு. அது என்ன?
8. கூடவே வருவான். ஆனால், பேச மாட்டான். அவன் யார்?
9. அறிவின் மறுபெயர், இரவில் வருவது. அது என்ன?
10. மரத்துக்கு மேலே பழம்; பழத்துக்கு மேலே மரம். அது என்ன?
விடுகதை போட்டவர்: வ. சுவர்ணாஞ்சலி,
6-ம் வகுப்பு, செல்வம் மெட்ரிக். பள்ளி, நாமக்கல்.
சுடோகு
எல்லாக் குழந்தைகளும் ஒரே வரிசையில் வருமாறும் ஒரே குழந்தை அருகருகே வராதபடியும் காலிக் கட்டங்களை நிரப்புங்களேன்!