மாயா பஜார்

இது எந்த நாடு? 78: தூய்மையான நிலம்

ஜி.எஸ்.எஸ்

கீழே உள்ள குறிப்புகளின் உதவியுடன் அவை உணர்த்தும் நாடு எது என்பதைக் கண்டுபிடியுங்கள்.

1. தெற்காசிய நாடு. 1947-ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது.

2. இந்த நாட்டின் பெயருக்குத் 'தூய்மையான நிலம்' என்று பொருள்.

3. ஆப்கானிஸ்தான், ஈரான், இந்தியா, சீனா போன்றவற்றை எல்லை நாடுகளாகக் கொண்டுள்ளது.

4. மக்கள் தொகையில் 6-வது இடத்தில் இருக்கும் நாடு.

5. இதன் தேசிய விளையாட்டு ஹாக்கி. 3 முறை ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற நாடு. கிரிக்கெட்டும் முக்கியமான விளையாட்டு.

6. கையால் தைக்கப்படும் கால்பந்துகளில் 60%  இந்த நாட்டில்தான் தயாரிக்கப்படுகின்றன.

7. எவரெஸ்டுக்கு அடுத்த உயர்ந்த சிகரமான கே2, இந்த நாட்டில்தான் உள்ளது.

8. கிரிக்கெட் வீரர் இம்ரான்கான், இப்போது இந்த நாட்டின் பிரதமராக இருக்கிறார்.

9. இந்த நாட்டின் தலைநகரம் இஸ்லாமாபாத்.

10. நோபல் பரிசு பெற்ற மலாலா, இந்த நாட்டைச் சேர்ந்தவர்.

விடை: பாகிஸ்தான்

SCROLL FOR NEXT