மாயா பஜார்

இது எந்த நாடு? 80: நதியின் பெயரே நாட்டின் பெயர்!

ஜி.எஸ்.எஸ்

கீழே உள்ள குறிப்புகளின் உதவியுடன் அவை உணர்த்தும் நாடு எது என்பதைக் கண்டுபிடியுங்கள்.

1. மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள நாடு. உலகின் மிகப் பெரிய 11-வது நாடு.

2. இந்த நாட்டின் முந்தைய பெயர் ஸைர் (Zaire).

3. இதன் தலைநகரம் கின்ஷஸா. இதுவே இந்த நாட்டின் மிகப் பெரிய நகரம்.

4. ஆட்சி மொழி பிரெஞ்சு என்றாலும் ஸ்வாஹிலி மொழியைப் பெரும்பாலானவர்கள் பேசுகிறார்கள்.

5. 2001-ம் ஆண்டிலிருந்து இந்த நாட்டின் குடியரசுத் தலைவராக ஜோசப் கபிலா  இருக்கிறார்.

6. இயற்கை வளம் கொட்டிக் கிடக்கும் நாடு. நிலையற்ற அரசாங்கக் கொள்கைகள் முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கின்றன.

7. ஜூன் 30, 1960-ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது.

8. வைரம், செம்பு, கச்சா எண்ணெய், காபி, கோபால்ட் போன்றவை முக்கிய ஏற்றுமதிப் பொருட்கள்.

9. இந்த நாட்டில் பாயும் நதி ஆப்பிரிக்க கண்டத்தின் இரண்டாவது நீளமான நதி. இந்த நதியின் பெயரே இந்த நாட்டின் பெயர்.

10. இங்குள்ள மழைக் காடுகளில் மனிதக் குரங்கு, மலை கொரில்லா, ஒகபி, வெள்ளைக் காண்டாமிருகம் போன்ற அரிய விலங்கினங்கள் காணப்படுகின்றன.

விடை: காங்கோ ஜனநாயகக் குடியரசு

SCROLL FOR NEXT