கீழே உள்ள 10 குறிப்புகள் ஒரு குறிப்பிட்ட நாட்டைக் குறிக்கின்றன. அது எந்த நாடு என்பதைக் கண்டுபிடியுங்கள்.
1. கிழக்கு ஐரோப்பாவிலுள்ள இந்த நாடு யுகோஸ்லாவியாவிடமிருந்து 1991-ல் பிரிந்து சுதந்திரம் பெற்றது. ரத்தம் சிந்தாமல் சுதந்திரம் பெற்ற ஒரே ஐரோப்பிய நாடு.
2. ஐரோப்பிய கண்டத்திலேயே மிகப் பழமையான பெயர் கொண்ட நாடு.
3.ஐ.நா.சபையில் 1993-ல் உறுப்பினரானது.
4. இதன் தலைநகர் ஸ்கோஜி
(Skopje).
5. மகா அலெக்சாண்டரின் நாடு.
6. உலகின் நான்காவது மிகப் பழமையான வானியல் கண்காணிப்பகம் இங்கே இருக்கிறது.
7. இங்கே 50 ஏரிகளும் 16 மிக உயர்ந்த மலைச் சிகரங்களும் இருக்கின்றன.
8. அன்னை தெரசா பிறந்த நாடு.
9. அரிசி, கோதுமை, சோளம் முக்கிய விளைபொருட்கள்.
10. குக்லிகா கிராமத்தில் இருக்கும் ‘ஸ்டோன் டவுன்’ புகழ்பெற்றது. இங்கே 120-க்கும் மேற்பட்ட இயற்கையாக உருவான கல் தூண்கள் காணப்படுகின்றன.
விடை: மாசிடோனியா