மாயா பஜார்

அம்மா இங்கே வா வா

செய்திப்பிரிவு

அம்மா இங்கே வா வா

வானவில்லைப் பார் பார்

வண்ணப் புடவை வேண்டுமா

மடித்துத் தாரேன் கட்டிக்கோ

நட்சத்திரங்களைப் பூவாக்கி

நடுநடுவே ஒட்டித் தாரேன்

மூன்று கிரகம் கொண்டு வந்து

முந்தானையில் கட்டித் தாரேன்

அம்புலியில் உனை ஏற்றி

அடுத்த கிரகம் கூட்டிப் போறேன்

அங்கே உனக்கு நாலடுக்கில்

அரண்மனை ஒன்று கட்டித் தாரேன்

ஐந்து நிலவில் விளக்கேற்றி

அரண்மனையெல்லாம் ஒளியாக்கி

சொர்க்கவாசல் மலர்களை

தோட்டம் போட்டு நட்டுத் தாரேன்

ஏழுகடல் தாண்டிப் போய்

எட்டுச் செல்வம் தேடி வாரேன்

ஏழு பிறவி எடுத்தாலும்

என்றும் உனது மகவாவேன்

- கனிஷ்கா, தென்காசி

SCROLL FOR NEXT