மாயா பஜார்

இது எந்த நாடு? 49: மிகப் பெரிய விக்டோரியா நீர்வீழ்ச்சி

ஜி.எஸ்.எஸ்

கீ

ழே உள்ள 10 குறிப்புகள் ஒரு குறிப்பிட்ட நாட்டைக் குறிக்கின்றன. அந்த நாடு எது என்பதைக் கண்டுபிடியுங்கள்.

1. ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென் பகுதியில் உள்ள நாடு.

2. இங்கு 16 அதிகாரபூர்வ மொழிகள் உண்டு. அவற்றில் ஆங்கிலம், ஷோனா, டெபெலே மொழிகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

3. ’ஒற்றுமை, சுதந்திரம், உழைப்பு' என்பது இந்த நாட்டின் குறிக்கோள்.

4. இந்த நாட்டு கிரிக்கெட் வீரர் கிராண்ட் ஃப்ளவர் மிகவும் புகழ்பெற்றவர்.

5. ராபர்ட் முகபே இதன் ஜனாதிபதியாக நீண்ட காலம் இருந்தார்.

6. பருத்தி, தங்கம், துணிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

7. சுதந்திரத்துக்கு முன்பாக தெற்கு ரொடீஷியா என்று அறியப்பட்ட பிரிட்டிஷ் காலனியாக இது இருந்தது.

8. ஏழு ஒலிம்பிக் பதக்கங்களை நீச்சல் பிரிவில் பெற்று, இந்த நாட்டுக்குப் பெருமை சேர்த்தவர் கிறிஸ்டி கோவென்ட்ரி.

9. இந்த நாட்டின் கொடியில் பச்சை, பொன் மஞ்சள், சிவப்பு, கறுப்பு நிறப் பட்டைகள் உண்டு.

10. உலகின் பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றான விக்டோரியா இங்கே இருக்கிறது.

விடை: ஜிம்பாப்வே

SCROLL FOR NEXT