மாயா பஜார்

இது எந்த நாடு? 99 - ரோஜா பள்ளத்தாக்கு

ஜி.எஸ்.எஸ்

கீழே உள்ள குறிப்புகளின் உதவியுடன் அவை உணர்த்தும் நாடு எது என்பதைக் கண்டுபிடியுங்கள்.

1. தென்கிழக்கு ஐரோப்பாவில் அமைந்த நாடு.

2. ருமேனியா, செர்பியா, மாசிடோனியா, கிரீஸ், துருக்கி ஆகியவை இதன் எல்லை நாடுகள்.

3. 1908-ம் ஆண்டு செப்டம்பர் 22 அன்று சுதந்திரம் பெற்றது.

4. மிகப் பழமையான நாடு. 6 ஆயிரம் ஆண்டுகளாக மக்கள் இங்கே வசித்து வருகின்றனர்.

5. இந்த நாட்டின் கரன்சி Lev.

6. ஆடைகள், காலணிகள், இரும்பு, எரிபொருள் போன்றவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

7. இந்த நாடும் டென்மார்க்கும் இரண்டாம் உலகப் போரின் போது யூதர்களைப் பாது காத்த இரண்டே நாடுகள்.

8. மிகப் பழமையான தங்கப் புதையல் இந்த நாட்டில் வர்னா என்ற இடத்தில்தான் கிடைத்திருக்கிறது.

9. இதன் தலைநகர் சோஃபியா. ஐரோப்பாவில் மிகப் பழமை யான இரண்டாவது நகரம்.

10. இங்குள்ள ரோஜா பள்ளத்தாக்கில் இருந்து உலகத் தேவையில் 85% ரோஜா எண்ணெய் எடுக்கப்படுகிறது. வாசனை திரவியங்களும் அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன.

விடை: பல்கேரியா

SCROLL FOR NEXT