மாயா பஜார்

இது எந்த நாடு? - 92: தீவுகளின் நாடு

ஜி.எஸ்.எஸ்

கீழே உள்ள குறிப்புகளின் உதவியுடன் அவை உணர்த்தும் நாடு எது என்பதைக் கண்டுபிடியுங்கள்.

1. தீவுகளால் ஆன நாடு. 6,852 தீவுகள் இருந்தாலும் 4 தீவுகளில்தான் 97% மக்கள் வசிக்கிறார்கள்.

2. ரஷ்யா, சீனா, கொரியா இதன் அண்டை நாடுகளாக உள்ளன

3. இங்குள்ள உயரமான மலைச் சிகரம் ஃபுஜி.

4. பூகம்பங்களும் சுனாமியும் அடிக்கடி நிகழும்.

5. சாமுராய் வீரர்களுக்குப் புகழ்பெற்ற நாடு.

6. ரோபோட் தொழில்நுட்பத்தில் முன்னணி வகிக்கும் நாடு. மோட்டார் வாகனங்கள், மின்னணுப் பொருட்களுக்கும் பிரசித்திப் பெற்ற நாடு.

7. தேசிய விளையாட்டு சுமோ.

8. இரண்டாம் உலகப் போரில் ஹிரோஷிமா, நாகசாகி என்ற இரண்டு நகரங்கள் மீது அமெரிக்கா அணு குண்டு வீசி அழித்தது.

9. இந்த நாட்டு மக்கள் கடினமான உழைப்பாளிகள். நேரத்தைச் சரியாகக் கடைப்பிடிப்பவர்கள்.

10. டோக்கியோ இந்த நாட்டின் தலைநகர்.

விடை: ஜப்பான்

SCROLL FOR NEXT