கீழே உள்ள குறிப்புகளின் உதவியுடன் அவை உணர்த்தும் நாடு எது என்பதைக் கண்டுபிடியுங்கள்.
1. நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்ட தென் அமெரிக்க நாடுகள் இரண்டு. அவற்றில் ஒன்று பராகுவே மற்றொன்று இந்த நாடு.
2. விடுதலைப் போராட்ட வீரர் சிமோன் பொலிவார் என்ற தலைவரின் நினைவாகத்தான் இந்த நாட்டுக்குப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
3. இந்த நாட்டின் தலைநகரம் சுக்ரே. உலகிலேயே மிக உயர்ந்த இடத்தில் இருக்கும் நிர்வாகத் தலைநகரம் லா பாஸ்.
4. நாட்டின் மிகப் பெரிய, பிரபலமான நகரம் சான்ட்டா க்ரூஸ்.
5. டிட்டிகாகா ஏரி மிகப் பெரியது. இதில் படகுகள் விடப்படுகின்றன. இந்த ஏரிக்குள் ஐலா டெல் சோல் தீவு இருக்கிறது.
6. இந்த நாட்டின் தேசிய விலங்கு லாமா.
7. ஸ்பானிய மொழி உட்பட 36 அதிகாரப்பூர்வ மொழிகள் இங்கே பேசப்படுகின்றன.
8. புரட்சியாளர் சேகுவேரா அமெரிக்கப் படையினரால் இந்த நாட்டில்தான் சுட்டுக் கொல்லப்பட்டார்.
9. 1825, ஆகஸ்ட் 6 அன்று சுதந்திரம் பெற்றது.
10. இயற்கை எரிவாயு, சோயா பீன்ஸ், சோயாவில் செய்யப்பட்ட பொருட்கள் போன்றவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
விடை: பொலிவியா