மாயா பஜார்

ஆனையும் பானையும் - குழந்தைப் பாடல்

கிருஷ்ணன் நம்பி

ஆனை வேணுமென்று குழந்தை

அழுது கூச்ச லிட்டான்

ஆனை கொண்டு வந்தார் ஆனால்

அழுகை தீர வில்லை.

பானை வேணும் என்றான் குழந்தை,

பானை கொண்டு வந்தார்.

ஆனை பானை இரண்டும் வந்தும்

அழுகை ஓய வில்லை.

“இன்னும் அழுவ தேனோ குழந்தாய்

இனியும் என்ன வேணும்”

என்று கேட்டபோது குழந்தை

ஏங்கி அழுது கொண்டு,

“இந்தப் பானைக் குள்ளே அந்த

ஆனை போக வேணும்!”

என்று சொல்லு கின்றான் ஐயோ

என்ன செய்ய முடியும்.

நன்றி: ‘யானை என்ன யானை' பாடல் தொகுப்பு, காலச்சுவடு வெளியீடு

SCROLL FOR NEXT