தேசத் தந்தை ‘மகாத்மா’ காந்தியின் குழந்தைப் பருவம் முதல் மறைந்ததுவரை இருந்த படங்களைக் கண்டு கண் கலங்கிவிட்டேன். சுருக்கமான வாழ்க்கை வரலாறும் படங்களும் மிகவும் அருமை!
-ஜே.எம்.ஆர். ரிபா நபிஹா, அவர் லேடி மேல்நிலைப் பள்ளி, பிராட்வே, சென்னை.
கதை நன்றாக இருந்தது. மாணவர்களின் சித்திரங்கள் அருமை. இரண்டு வாரங்களாகக் காணாமல் போயிருந்த டிங்கு மீது கோபத்துடன் இருந்தேன். நல்லவேளை, இந்த வாரம் வந்துவிட்டாய்!
-சா. பி. ஆனந்த், 9-ம் வகுப்பு, ஜமீன்தார் மேல்நிலைப் பள்ளி, துறையூர்.
‘உப்பளத்துக்கு வந்த வெள்ளை யானை’ கதை நன்றாக இருந்தது. அலாயை எனக்குப் பிடித்துவிட்டது.
-செ. தன்ஷிகா, 5-ம் வகுப்பு, கார்த்தி வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, கும்பகோணம்.
‘பாம்புக்குத் தடை விதித்த ராஜா’, ‘உப்பளத்துக்கு வந்த வெள்ளை யானை’ என்று மாயாபஜார் கதைகள் சூப்பர்.
-பா. ரக்ஷனி, 11-ம் வகுப்பு, தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளி, கடலூர்.
மருதனின் கட்டுரை ஒவ்வொரு வாரமும் புதுப்புது விஷயங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறது. வார்த்தைப் புதிரை மாணவர்கள் மிகவும் ஆர்வத்தோடு போட்டிபோட்டுக்கொண்டு கண்டுபிடிக்கிறார்கள். பிப்பெட், பியூரெட் குறித்த விவாதம் வகுப்பில் நிகழ்ந்தது. ‘டிங்குவிடம் கேளுங்கள்’, ’படம் நீங்க… வசனம் நாங்க…’, ‘படக்கதை’ இல்லாதது மாணவர்களை வருத்தமடைய வைத்துவிட்டது. மாணவர்களிடம் அதிக வரவேற்பு பெற்ற டிங்குவை, இந்த வாரம் சந்தித்ததில் மகிழ்ச்சி.
-எஸ். மகாலட்சுமி, ஆசிரியர், எஸ்.ஆர்.வி. (சிபிஎஸ்இ) பப்ளிக் பள்ளி, சமயபுரம், திருச்சி.
‘காந்தி 150' மிகவும் சுவாரசியமாக இருந்தது. ‘உப்பளத்துக்கு வந்த வெள்ளை யானை' கற்பனை விருந்தாக அமைந்தது. பாக்யதிரியாவில் விக்டர், நடேருக்குப் பதிலாக நான் இருந்திருக்கக் கூடாதா என்ற எண்ணம் தோன்றியது. டிங்குவை மீண்டும் கொண்டு வந்ததில் மகிழ்ச்சி.
-சுபிக்ஷா, ஓசூர்.
காந்தியின் இளமைப் பருவம் முதல் முதுமைப் பருவம்வரை அரிய படங்களுடன் பார்ப்பதற்கும் படிப்பதற்கும் சுவாரசியமாகக் கொடுத்ததற்கு நன்றி. எங்கள் மாணவர்கள் மகிழ்ச்சியோடு படித்தனர்.
-மா. பழனி, தலைமை ஆசிரியர், சின்னப் பள்ளத்தூர், தருமபுரி.
புலியைக் கணக்கெடுப்பதில் இத்தனை விஷயங்களா? தடங்களும் உடலில் உள்ள கோடுகளும் ஒவ்வொரு புலிக்கும் மாறுபடும் என்ற செய்தியை அறிந்துகொண்டோம். எங்கள் கேள்விகளுக்குப் பதிலளிப்பதன் மூலம் பொதுஅறிவை வளர்த்துவிடும் டிங்குவை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்!
-ஆர்.விஜய், மதுரை.
‘காந்தி 150’ என்று குழந்தைப் பருவம் முதல் இறுதி நாள்வரை அரிதான படங்களாகத் தந்து படிக்கவும் பாதுகாக்கவும் செய்துவிட்டது மாயாபஜார். இறுதியில் ‘இன்றும் என்றும் இருப்பார் காந்தி’ என்று படித்தபோது கண்ணீர் வந்துவிட்டது.
-அ. பிரியதர்சினி, 7-ம் வகுப்பு, சேதுலெட்குமிபாய் பெண்கள் அரசு உயர்நிலைப் பள்ளி, ராசாக்கமங்கலம், குமரி.