சின்ன அணில் தத்தித் தத்தி
அருகில் வந்தது!
சிறிதுகூட அச்சமின்றி என்
கைக்கு வந்தது!
தங்கை கையில் நிலக்கடலை
ஒன்று பார்த்தது
தாவிச் சென்று வாயில் கவ்வி
பல்லால் கொறிக்குது!
மூன்று பட்டை முதுகைப் பார்க்க
ஆசை வந்தது!
முயன்று தடவச் சென்றபோது
கையைக் கடித்தது!
சிவப்புக் குச்சி நாக்கை நீட்டித்
தண்ணீர் குடித்தது!
திரும்ப திரும்ப கடலை எங்கே
என்று கேட்குது!