மாயா பஜார்

அறிஞர்களின் வாழ்வில்: நனவான கனவு!

செய்திப்பிரிவு

மைக்கேல் ஃபாரடே மிக ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். அதிகம் படிக்கவில்லை. புத்தகம் பைண்ட் செய்யும் இடத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கே வரும் புத்தகங்களை எல்லாம் ஆர்வத்துடன் படித்தார். படித்தவற்றைக் குறிப்பு எடுத்துக்கொண்டார். ஒருநாள் வில்லியம் டான்ஸ், பைண்ட் செய்யப்பட்ட புத்தகத்தை வாங்குவதற்காக வந்தார். அப்போது கடையின் உரிமையாளர் ஃபாரடேயின் குறிப்புகளைக் காட்டினார். ஒரு சாதாரண சிறுவன் எளிமையான முறையில் ரசாயன சோதனைகளைப் பற்றி எழுதியிருந்ததைக் கண்டு வில்லியம் டான்ஸ் ஆச்சரியமடைந்தார். புகழ்பெற்ற விஞ்ஞானி சர் ஹம்ப்ரி டேவியின் உரைகளைக் கேட்பதற்காக டிக்கெட்டுகளை வழங்கினார். ஃபாரடேயும் நான்கு நாட்கள் உரைகளைக் கேட்டார். ‘இதேபோல் ஒரு நாள் நானும் பேச முடியுமா? என் பேச்சையும் மக்கள் கேட்பார்களா? நான் அதிகம் படிக்காதவன். நன்றாகப் பேசவும் தெரியாது. வசதியும் இல்லை’ என்று யோசித்தார். அதற்காகக் கடுமையாக உழைத்தார். 15 ஆண்டுகளுக்குப் பிறகு சிட்டி பிலாசபிகல் சொசைட்டியில் விஞ்ஞானி மைக்கேல் ஃபாரடேயின் உரை நிகழ்ந்தது. ஹம்ப்ரி டேவிக்கு வந்த கூட்டத்தை விட அதிகமான கூட்டம் கூடியது!

SCROLL FOR NEXT