மாயா பஜார்

இது எந்த நாடு? 72: உலகின் மிகப் பெரிய தீவு!

ஜி.எஸ்.எஸ்

கீழே உள்ள குறிப்புகளின் உதவியுடன், அது எந்த நாடு என்பதைக் கண்டுபிடியுங்கள்.

1. உலகின் மிகப் பெரிய தீவும் இந்த நாடுதான், மிகச் சிறிய கண்டமும் இந்த நாடுதான்.

2. இந்த நாட்டின் தலைநகரம் கான்பெரா.

3. உலகின் மிகப் பெரிய பவளத்திட்டுகள் இந்த நாட்டின் கடல் பகுதியில்தான் இருக்கின்றன.

4. தேசிய விலங்கு கங்காரு. தேசியப் பறவை ஈமு.

5. கோலா, வாம்பட், வால்லரு போன்ற விலங்குகளும் இந்த நாட்டின் சிறப்பு உயிரினங்கள்.

6. மழைக் காடுகளும் பாலைவனமும் இங்கே இருக்கின்றன.

7. உலகிலேயே மிக அதிகமான (750) ஊர்வன உயிரினங்கள் இந்த நாட்டில்தான் இருக்கின்றன.

8. 1956-ம் ஆண்டு மெல்பர்னிலும் 2000-வது ஆண்டு சிட்னியிலும் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற நாடு.

9. நிலக்கரியை அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடு.

10. புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் டான் பிராட்மேன் இந்த நாட்டைச் சேர்ந்தவர்.

விடை: ஆஸ்திரேலியா

SCROLL FOR NEXT