மாயா பஜார்

விடுகதைகள்: காவல் நிறைந்த பொட்டலம்!

செய்திப்பிரிவு

1. காகிதத்தைக் கண்டால் கண்ணீர் விடும். முக்காடு போட்டால் மூலையில் அமரும். அது என்ன?

2. காட்டில் தொங்கும் பொட்டலம். காவல் நிறைந்த பொட்டலம். அது என்ன?

3. காட்டிலே இருக்கிற கண்ணம்மாள், வீட்டிலே வந்து விளையாடுகிறாள். அவள் யார்?

4. காட்டுக்குள் இருக்கும் குடை, வீட்டுக்குள் இருக்காது. அது என்ன?

5. காட்டிலே சிரித்தபடி நிற்பாள், பெண்ணும் அல்ல; கை பட்ட உடன் துவண்டு விடுவாள், பூவும் அல்ல. அது என்ன?

6. காட்டு கறிவேப்பிலையை வளைத்து ஒடிக்க முடியவில்லை. அது என்ன?

7. காடும் கருங்காடு, கம்பும் கருங்கம்பு. குத்துவார் உண்டு, தின்பாரில்லை. அது என்ன?

8. காட்டு ஓரம் போகிற கடாவுக்குக் கிள்ளிப் பிடிக்க முடி இல்லை. அது என்ன?

விடைகள்: 1. பேனா, 2. தேன்கூடு, 3. துடைப்பம், 4. காளான், 5. தொட்டாற்சிணுங்கி, 6. தலைமுடி, 7. பேன், 8. ஆமை.
SCROLL FOR NEXT