மாயா பஜார்

பாம்பின் விஷம் ஏன் கீரியைக் கொல்வதில்லை? | டிங்குவிடம் கேளுங்கள்

செய்திப்பிரிவு

பாம்புகளின் விஷம் கீரிகளையும் கழுகு களையும் ஏன் கொல்வதில்லை, டிங்கு? - எஸ். நவீன் குமார், 8-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, அரியலூர்.

கீரியின் தோல் தடிமனானது. அத்துடன் அதற்கு நிறைய முடியும் இருக்கும். பெரும்பாலும் பாம்பின்கடி படாதபடிதான் அது தாக்குதலை மேற்கொள்ளும். ஒருவேளை பாம்புக் கடித்துவிட்டால், கீரியின் உடலிலுள்ள நிகோடினிக்அசிட்டைல்கோலின் (Nicotinic acetyl choline receptors) என்கிற எதிர்ப்பாற்றல் விஷத்தை முறித்துவிடும்.

அதனால் பாம்புடன் கடுமையாகச் சண்டை போட்டாலும் கீரிக்குப் பாதிப்பு இல்லை. கழுகுக்குப் பாம்பின் விஷத்தை முறிக்கக்கூடிய எதிர்ப்பாற்றல் கிடையாது.

ஆனாலும் வேகமாகச் செயல்படுவதால் பாம்பின் கடியிலிருந்து தப்பிவிடுகிறது. இமைக்கும் நேரத்தில் பாம்பைத் தூக்கிக்கொண்டு உயரத்துக்குச் சென்றுவிடும். பிறகு திடீரென்று பாம்பைப் பாறை மீது வீசும். இறுதியில் பாம்பைக் கொன்றுவிடும், நவீன் குமார்.

SCROLL FOR NEXT