மனிதர்களுக்கு இறக்கை முளைக்குமா? - நன்மாறன் திருநாவுக்கரசு
வேற்றுக் கோள்களில் உயிர்கள் இருக்கின்றனவா, ஞாபகங்கள் எப்படி உருவாகின்றன, ஆண்-பெண் பாலினத்தை நிர்ணயிப்பது யார், தாவரங்களுக்குப் பச்சை நிறம் பிடிக்காதா, ஆக்சிஜன் ஆபத்தான வாயுவா, மனிதர்கள் சாகாவரம் பெற முடியுமா என்பன போன்று சுவாரசியமான, அதிகம் எழுதப்படாத விஷயங்களைப் பற்றிக் கூறும் நூல்.
விண்வெளி வீர மங்கை சுனிதா வில்லியம்ஸ், பெ.சசிக்குமார்
சுனிதா வில்லியம்ஸின் விண்வெளிப் பயணம் பற்றி மட்டுமல்லாமல், எண்ணற்ற ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பல்வேறு சவால்களைச் சந்தித்த விண்வெளி மனிதர்களின் கதை இது. விண்வெளிப் பயணத்தின் சாதனைகள், விண்வெளி நிலையத்தின் கட்டமைப்புகள் எனப் பல புதிய தகவல்களை இந்தப் புத்தகம் தருகிறது.
விண்மீன் திருடும் அவிரா, எழுத்து, ஓவியம்: மமதி சாரி
காடு வழியே நிலா இறங்கி வரும் படிகளைக் கொண்ட மலை இருக்கிறது. அதில் ஏறி நட்சத்திரத்தைப் பறித்து வரப் புறப்படுகிறாள் அவிரா என்கிற சிறுமி. அவளுக்கு நட்சத்திரம் கிடைத்ததா, அதை வைத்து அவிரா என்ன செய்தாள், அதன் பிறகு என்ன நடந்தது என்பதே கதை.
கடற்கொள்ளையருக்கும் கறுமொறு தேவை! எழுத்து, ஓவியம்: மமதி சாரி
குட்டிப் பையன் என்கோ, அவனுடைய நண்பன் ஆட்டுக்குட்டிப் பறல். இருவரும் புதிய நண்பன் இம்மி என்கிற கரப்பான்பூச்சியைச் சந்திக்கிறார்கள். கடற்கொள்ளையராக மாறுவதற்கு அவர்களே உருவாக்கிய படகில் புறப்படுகிறார்கள். அவர்கள் திட்டமிட்டபடி கடற் கொள்ளையர் ஆனார்களா என்பதே கதை.
ஜென் ஞானக்கதைகள், எழுத்து, ஓவியம்: முத்து
இளைஞர்களும் பள்ளிக் குழந்தைகளும் அறிந்துகொள்ளக்கூடிய வகையில் சுருக்கமான மொழி, ஓவியங்களின் நேரடி வெளிப்பாட்டுத் திறனுடன் இந்த நூல் அமைந்திருக்கிறது. குழந்தைகள் விரும்பும் மாறுபட்ட வடிவமைப்பு, சித்திரங்களுடன் இந்த நூல் வெளியாகியிருக்கிறது. தொடக்க நிலையில் ஜென் தத்துவத்தை அறிமுகப்படுத்துவதற்கு இந்த நூல் உதவும். - நேயா
நூல்களை வாங்கத் தொடர்புக்கு: 74012 96562/ 74013 29402
இணையத்தில் வாங்க: https://rb.gy/qpzxj6