மாயா பஜார்

இது எந்த நாடு? 71: பேரீட்சைகளின் நாடு

ஜி.எஸ்.எஸ்

கீழே உள்ள 10 குறிப்புகள் ஒரு குறிப்பிட்ட நாட்டைக் குறிக்கின்றன. அது எந்த நாடு என்பதைக் கண்டுபிடியுங்கள்.

1. வடக்கு ஆப்பிரிக்காவில் மத்திய தரைக் கடல் பகுதியில் அமைந்துள்ள நாடு.

2. இந்த நாட்டின் 80% நிலம் சகாரா பாலைவனமாக இருக்கிறது.

3. 1962-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டிடமிருந்து விடுதலை பெற்றது.

4. பேரீட்சை, செர்ரி அதிகம் விளைவதால், இது ‘பேரீட்சைகளின் நாடு’ என்று அழைக்கப்படுகிறது.

5. இதுவரை 15 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று, 15 பதக்கங்களைப் பெற்றிருக்கிறது. இதில் 5 தங்கப் பதக்கங்களும் உண்டு.

6. Albert Camus இலக்கியத்துக்கும் Claude Cohen-Tannoudji இயற்பியலுக்கும் நோபல் பரிசு பெற்றிருக்கிறார்கள்.

7. மற்ற ஆப்பிரிக்க நாடுகளைவிட இந்த நாட்டில் பெண்கள் அதிகம் படிக்கிறார்கள், உயர்ந்த பதவிகளில் இருக்கிறார்கள்.

8. தேசிய விலங்கு ஃபென்னெக் நரி. இது பாலைவனங்களில் வசிக்கும் சிறிய வகை நரி.

9. கொடியில் இருக்கும் சிவப்பு, சுதந்திரப் போராட்ட வீரர்களையும், பச்சை இயற்கையையும், வெள்ளை அமைதியையும், சிவப்புப் பிறை, நட்சத்திரம் இஸ்லாமிய நாடு என்பதையும் குறிக்கிறது. 

10.  மிகப் பெரிய நதி செலிஃப். பரப்பளவில் ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய நாடு, உலக அளவில் பத்தாவது பெரிய நாடு.

விடை: அல்ஜீரியா

SCROLL FOR NEXT