மாயா பஜார்

இது எந்த நாடு? 70: ஆயிரம் ஏரிகளின் நாடு

ஜி.எஸ்.எஸ்

கீழே உள்ள 10 குறிப்புகள் ஒரு குறிப்பிட்ட நாட்டைக் குறிக்கின்றன. அது எந்த நாடு என்பதைக் கண்டுபிடியுங்கள்.

1. வட கிழக்கு ஐரோப்பாவிலுள்ள ஒரு நாடு. ரஷ்யாவிடமிருந்து 1917-ல் சுதந்திரம் பெற்றது. ஐரோப்பிய யூனியனில் 1995-ல் இணைத்துக் கொண்டது.

2. ஸ்வீடன், நார்வே, ரஷ்யா ஆகிய நாடுகளை எல்லைகளாகக் கொண்டது.

shutterstock_154741178

3. இதன் தலைநகரம் ஹெல்சிங்கி. 1952-ல் ஒலிம்பிக் போட்டிகள் இந்த நகரில்தான் நடந்தது.

4. பழுப்பு நிறக் கரடி இந்த நாட்டின் தேசிய விலங்கு. சாம்பல் நிற ஓநாய்களும் அதிகமாகக் காணப்படுகின்றன.

5. Whopper Swan என்ற அன்னம் தேசியப் பறவை. பறக்கக் கூடிய, அதிக எடை கொண்ட பறவைகளில் இதுவும் ஒன்று.

6. இந்த நாட்டில் சுமார் 1,87,000 ஏரிகள் உள்ளன. அதனால் ‘ஆயிரம் ஏரிகளின் நாடு’ என்ற பெயரும் இதற்கு உண்டு.

7. இந்த நாட்டுக் கொடியில் இருக்கும் நீலம் ஏரிகளையும், வெண்மை பனியையும் குறிக்கிறது.

8. இந்த நாட்டின் மென்பொறியாளர் Linus Benedict Torvalds உருவாக்கிய ஓபன் சோர்ஸ் மார்கெட்டிங் சிஸ்டம் Linux.

9. மிகப் பெரிய அலைபேசி நிறுவனமான நோக்கியா, இந்த நாட்டைத்தான் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டுவருகிறது.

10. பெண்கள், குழந்தைகள் முன்னேற்றத்திலும் அனைவருக்கும் சம உரிமை அளிப்பதிலும் முன்னணி வகிக்கும் நாடு. 1907-ம் ஆண்டு நடைபெற்ற முதல் தேர்தலில் 19 பெண்கள் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

விடை: ஃபின்லாந்து

SCROLL FOR NEXT