மாயா பஜார்

தோசை சாப்பிட விரும்பும் சிங்கம்!

செய்திப்பிரிவு

கரடி டேல்ஸ் நிறுவனம் ஆங்கிலத்தில் வெளியிட்ட 4 கதைகளை கொ.மா.கோ. இளங்கோ தமிழில் மொழிபெயர்த்துள்ளார். திகிலும் சிரிப்பும் நிறைந்த ‘சிங்கத்துக்கு விருந்து' (லாவண்யா கார்த்திக்) கதையில் சாம்பார், சட்னியுடன் தோசை சாப்பிட விரும்புகிறது ஒரு சிங்கம்.

‘இரவு அரக்கன்' (சஸ்ரீ மிஸ்ரா) கதையில் வரும் சிறுவன் அவி இரவைக் கண்டு முதலில் பயப்படுகிறான், பிறகு இரவு அரக்கனுக்குக் கடிதம் எழுதுகிறான், அதற்கு பதில் கிடைக்கிறது. பிரபல காட்டுயிர் எழுத்தாளர் பங்கஜ் சேக்ஷரியா எழுதிய ‘ஆமைகளுக்குக் காத்திருப்போம்' கதையில் கடற்கரைக்கு முட்டையிட வரும் கடல் ஆமைகளைச் சிறுவன் சாம்ராட் நேரிலேயே பார்க்கிறான்.

‘டோர்ஜே இழந்த வரிகள்’ (அன்ஷுமணி ருத்ரா) கதையில், திபெத் பௌத்த மடாலயத்துக்கு வரும் டோர்ஜே புலி வரிகள் இல்லாமல் இருக்கிறது, அது ஏன் அப்படி ஆனது என்று கதை ஆராய்கிறது. இப்படி இந்த 4 கதைகளும் நான்கு பாணிகளில் உயிரினங்களைக் காட்டுகின்றன. மொழிபெயர்ப்பு எளிமையாகவும் ஓவியங்கள் சிறப்பாகவும் உள்ளன.

கரடி டேல்ஸ் கதைகள், தமிழில்: கொ.மா.கோ.இளங்கோ, புக்ஸ் ஃபார் சில்ரன், தொடர்புக்கு: 044 2433 2924

SCROLL FOR NEXT