ஆக்சிஜன் எரிதலுக்குத் துணைபுரியும் வாயு. அப்படி என்றால் ஆக்சிஜன் இருக்கும் தண்ணீரை ஏன் நெருப்பை அணைக்கப் பயன்படுத்துகிறார்கள், டிங்கு? - வி. சிவப்ரியா, 7-ம் வகுப்பு, பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளி, தங்களாச்சேரி, திருமங்கலம்.
இரண்டு ஹைட்ரஜன் அணுக்களும் ஓர் ஆக்சிஜன் அணுவும் சேரும்போது தண்ணீர் உருவாகிறது. ஹைட்ரஜன்தான் எரியக் கூடியது. எரிய ஆரம்பித்த பிறகு அந்த வெப்பத்தைத் தக்கவைக்கக்கூடிய ஆற்றல் ஆக்சிஜனுக்கு உண்டு. எரியும் தீயின் மீது தண்ணீரை ஊற்றினால், வெப்பத்தை அது குளிர்விக்கிறது.
அத்துடன் தீயைக் கட்டுப்படுத்தவும் செய்கிறது. அதாவது, எரிவதற்குத் தேவையான எரிபொருளையும் எரிவதை ஊக்குவிக்கும் ஆக்சிஜன் காற்றிலிருந்து கிடைப்பதையும் தண்ணீர் தடை செய்கிறது. நீரின் ஒரு பகுதியாக இருக்கும் ஆக்சிஜன் எரிவதில்லை, சிவப்ரியா.