மாயா பஜார்

இது எந்த நாடு? 66: நிலவில் கால் பதித்த முதல் மனிதர்

ஜி.எஸ்.எஸ்

கீ

ழே உள்ள 10 குறிப்புகள் ஒரு நாட்டைக் குறிக்கின்றன. குறிப்புகளின் உதவியுடன் அந்த நாட்டைக் கண்டுபிடியுங்கள்.

1. பூர்வகுடிகளை வென்று பிரிட்டானியர்கள் இந்த நாட்டில் குடியேறினர். பிறகு தாய் நாடான பிரிட்டனுடன் போரிட்டு சுதந்திரம் பெற்ற நாடு.

2. ஐம்பது மாநிலங்களால் உருவான நாடு. (அவற்றில் ஒன்றை சோவியத் யூனியனிடமிருந்து இது வாங்கிக் கொண்டது). எனவே இதன் கொடியில் 50 நட்சத்திரங்கள் உள்ளன.) ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் நிரந்தர உறுப்பினரான நாடு.

3. மிசிசிபி, மிசெளரி என்ற இரண்டு நீளமான நதிகள் இங்கே பாய்கின்றன.

4. பெஞ்சமின் ஃபிராங்கிளின், அலெக்சாண்டர் கிரஹாம் பெல், தாமஸ் ஆல்வா எடிசன் போன்ற பிரபல விஞ்ஞானிகள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்.

5. நீல் ஆம்ஸ்ட்ராங் என்ற முதல் மனிதரை நிலவில் கால் பதிக்க வைத்த நாடு.

6. பிரான்ஸ் நாடு அன்பளிப்பாக வழங்கிய சுதந்திர தேவி சிலை, இந்த நாட்டின் அடையாளங்களில் ஒன்று.

7. மிக்கி மவுஸ், டொனால்ட் டக் போன்ற கார்ட்டூன் கதாபாத்திரங்களை வரைந்த வால்ட் டிஸ்னி இந்த நாட்டைச் சேர்ந்தவர்.

8. உலகின் மிகப் பெரிய அலுவலக வளாகம் இங்குள்ள பென்டகன்.

9. டைகர் உட்ஸ், வில்லியம்ஸ் சகோதரிகள், மைக்கேல் ஜோர்டான், மைக்கேல் ஃபெல்ப்ஸ், முகம்மது அலி போன்ற விளையாட்டு வீரர்கள் இந்த நாட்டுக்குப் பெருமை சேர்த்தவர்கள்.

10. இத்தாலியக் கடல் பயணியான அமெரிகோ வெஸ்புச்சியின் பெயரைக் கொண்ட நாடு.

விடை: அமெரிக்க ஐக்கிய நாடுகள்

SCROLL FOR NEXT