மழையே மழையே வந்திடு
மண்ணில் வந்து விழுந்திடு!
உழவே செழிக்க வந்திடு
உயிரைக் காக்க வந்திடு!
பச்சை கொஞ்சி வயலிலே
பயிர்கள் செழிக்க வந்திடு!
இச்சை கொண்டு மக்களே
இனிதே வாழச் செய்திடு!
தாகம் தீர்க்க வந்திடு
தாயாய் வந்து நின்றிடு!
மேகம் திரண்டு வானிலே
மின்னல் இடியுடன் வந்திடு!
கானல் நீக்க வந்திடு
கங்கை, பொன்னியில் வந்திடு!
வேனல் போக்க இன்பமே
வீற்றி ருக்க வந்திடு!
காடு செழிக்க வந்திடு
கனிகள் கொடுக்க வந்திடு!
நாடு செழிக்க வைத்திடு
நல்ல மழையே வந்திடு!
- செ.சு. மலரடியான், கள்ளக்குறிச்சி.