கீ
ழே உள்ள 10 குறிப்புகள் ஒரு குறிப்பிட்ட நாட்டைக் குறிக்கின்றன. அது எந்த நாடு என்பதைக் கண்டுபிடியுங்கள்.
1. கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடு.
2. 1948-ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது.
3. பெரும்பாலான மக்கள் பேசும் மொழி ஹாங்குல். இந்த நாட்டின் கரன்சி வோன்.
4.1988-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் இந்த நாட்டில் நடைபெற்றன. இந்த ஆண்டின் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளையும் இந்த நாடே நடத்தியது.
5. ஆண்டுக்கு இரண்டு புத்தாண்டுகளைக் கொண்டாடும் நாடு இது.
6. சைபீரியப் புலி இந்த நாட்டின் தேசிய விலங்கு.
7. இந்த நாட்டின் தலைநகரம் சியோல்.
8. சியோராக்சன் தேசியப் பூங்கா முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்று. இங்கே பிரம்மாண்டமான புத்தர் சிலை இருக்கிறது.
9. பிளாஸ்டிக் சர்ஜரி அதிகம் நடைபெறும் நாடு.
10. இந்த நாட்டின் தேசிய விளையாட்டு டைக்வாண்டோ. இது ஒரு தற்காப்புக் கலை.
விடை: தென் கொரியா