மாயா பஜார்

புத்தக அறிமுகம்: ஜாலியாக வாசிக்கலாம்!

நீரை மகேந்திரன்

ஜெமீமா வாத்து

பீட்ரிக்ஸ் பாட்டர் | தமிழில்: சரவணன் பார்த்தசாரதி

’பீட்டர் ராபிட்’ என்ற கதாபாத்திரத்தை வைத்துப் புகழ்பெற்ற கதைகளை எழுதிய ஆங்கில எழுத்தாளர் ப்யாட்ரிக்ஸ் பாட்டர். தன்னுடைய கதைகளுக்கு இவரே ஓவியங்களையும் வரைந்திருக்கிறார். இவரது பிரபலமான சில கதைகள் இந்தத் தொகுப்பில் இருக்கின்றன. முட்டையைத் தானே அடைகாக்க ஆசைப்பட்டு நரியிடம் சிக்கிக்கொள்ளும் ஜெமீமா வாத்து, மெக் கிரேக்கரின் முட்டைகோஸ் தோட்டத்தில் மாட்டிக்கொள்ளும் குறும்பனான பீட்டர் முயல், நட்கின் அணிலின் சேட்டைகள் என்று ஒவ்வொரு கதையும் சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கிறது.

வானம் பதிப்பகம் வெளியீடு, தொடர்புக்கு: 91765 49991

புலி கிலி

நீதிமணி

நகைச் சுவைக் கதைகள் குறைந்து போன இந்தக் காலத்தில், சிரிக்கச் சிரிக்கப் படிக்க வைக்கும் 8 கதைகள் கொண்ட தொகுப்பு இது. புலி கிலி, வால் இல்லாத நாய்க்குட்டி, காட்டெருமையின் ஆசை போன்ற கதைகள் சுவாரசியமாக இருக்கின்றன. வழவழப்பான தாளில் வண்ணப்படங்களுடன் கொடுக்கப்பட்டுள்ள இந்தக் கதைகள், நல்ல செய்திகளையும் தருகின்றன.

புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு, தொடர்புக்கு: 044- 2433 2424

வண்ணத்துப்பூச்சி சொன்ன கதை

சுகுமாரன்

இன்றைய குழந்தைகளின் விருப்பத்துக்கு ஏற்ப எழுதப்பட்ட 12 கதைகளின் தொகுப்பு. வளமான கற்பனையுடன் நற்பண்புகளையும் போதிக்கின்றன. வண்ணத்துப் பூச்சி சொன்ன கதை, சிங்கக் குட்டிக்குத் தூக்கம் வரவில்லை, புதிய பாடம் போன்ற கதைகள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன.

வானம் பதிப்பகம் வெளியீடு, தொடர்புக்கு: 91765 49991

SCROLL FOR NEXT