கீ
ழே உள்ள 10 குறிப்புகள் ஒரு குறிப்பிட்ட நாட்டைக் குறிக்கின்றன. அது எந்த நாடு என்பதைக் கண்டுபிடியுங்கள்.
1. ஸ்காண்டிநேவிய நாடுகளில் ஒன்று. ஸ்வீடனுக்குத் தென்மேற்காகவும், நார்வேக்குத் தெற்காகவும் உள்ளது.
2. இதன் தலைநகர் கோபன்ஹேகன்.
3. தேசிய விளையாட்டு கால்பந்து.
4. ஐஸ்லாந்துக்கு அடுத்தபடியாக உலகில் மிக அமைதியான நாடு இது என்று கருதப்படுகிறது.
5. மன்னராட்சி நீண்ட காலத்துக்கு தொடரும் நாடு இது (ஆயிரம் வருடங்களுக்கும் அதிகமான மன்னராட்சி).
6. இங்கு 407 தீவுகள் இருக்கின்றன. இவற்றில் 70 தீவுகளில் மட்டுமே மனிதர்கள் வசிக்கிறார்கள்.
7. இதுவரை இந்த நாட்டைச் சேர்ந்த 14 பேர் நோபல் பரிசு பெற்றுள்ளனர்.
8. ‘தேவதைக் கதைகளின் தந்தை’ என்று போற்றப்படும் ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆன்டர்சன் இந்த நாட்டைச் சேர்ந்தவர்.
9. வானியல் விஞ்ஞானி டைகோ பிராஹே இந்த நாட்டில் பிறந்தவர்.
10. குழந்தைகள் விரும்பும் ஒன்றுடன் ஒன்று பொருந்தக்கூடிய பிளாஸ்டிக் துண்டுகளால் ஆன விளையாட்டுப் பொருட்களை உருவாக்கும் ‘லீகோ’ நிறுவனம் இங்கேதான் இருக்கிறது.
விடை: டென்மார்க்