கீழே உள்ள 10 குறிப்புகள் ஒரு குறிப்பிட்ட நாட்டைக் குறிக்கின்றன. அது எந்த நாடு என்பதைக் கண்டுபிடியுங்கள்.
1. வட ஆப்பிரிக்காவில் உள்ள நாடு. இதன் வடக்கில் ஆஞ்செலா முனை (Cape Angela) உள்ளது.
2. கொலோசியம் போன்ற எல் ஜெம் கட்டிடம் புகழ்பெற்றது.
3. 2011-ம் ஆண்டில் இங்கு ஏற்பட்ட மக்கள் புரட்சி வெற்றி பெற்றது.
4. இந்த நாட்டின் 40 சதவிகிதப் பரப்பு சஹாரா பாலைவனம்.
6. தேள்களும் பாம்புகளும் இங்கு அதிகம்.
7. 1,300 கி.மீ. தூரத்துக்குக் கடற்கரை அமைந்துள்ள நாடு.
8. கால்பந்து மிகப் பிரபலமான விளையாட்டு.
9. இந்த நாட்டைச் சேர்ந்த முகமது கம்மவுடி நான்கு ஒலிம்பிக் பதக்கங்களைப் பெற்றிருக்கிறார்.
10. 1956-ம் ஆண்டு பிரான்ஸிடமிருந்து விடுதலை பெற்ற நாடு.
விடை: துனிஷியா