கீ
ழே உள்ள 10 குறிப்புகள் ஒரு குறிப்பிட்ட நாட்டைக் குறிக்கின்றன. அது எந்த நாடு என்பதைக் கண்டுபிடியுங்கள்.
1. தெற்கு ஐரோப்பாவிலுள்ள ஒரு தீவு நாடு. மொத்தம் ஏழு தீவுகள் கொண்டது.
2. மிகச் சிறிய நாடுகளில் இதுவும் ஒன்று.
3. 1964-ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது.
4. கலிப்சோ குகை பிரபலமானது. ஒடிஸி காவியத்தில் ஹோமர் இந்தக் குகையைக் குறிப்பிட்டிருக்கிறார்.
5. மால்ட்டீஸ், ஆங்கிலம் அதிகாரப்பூர்வ மொழிகள்.
6. இதன் தலைநகரம் வல்லெட்டா.
7. உருளைக் கிழங்கு, காலிஃபிளவர், திராட்சை, கோதுமை, பார்லி, தக்காளி போன்றவை முக்கிய விளைபொருட்கள்.
8. பிரமிடுகளை விட மிகப் பழமையான, கல் தூண்களால் ஆன ஆலயங்கள் இங்கு உள்ளன.
9. இங்கு மீன்பிடி படகுகள் கண்கவர் வண்ணங்களில் காட்சியளிக்கின்றன. இந்தப் படகுகளில் இரு கண்கள் வரைவது பழங்காலத்திலிருந்து தொடர்ந்து வருகிறது.
10. கரன்சி லிரா.
விடை: மால்டா