மாயா பஜார்

இது எந்த நாடு? 54 - 2022 உலகக் கால்பந்து போட்டி நடக்கும் நாடு

ஜி.எஸ்.எஸ்

கீ

ழே உள்ள 10 குறிப்புகள் ஒரு குறிப்பிட்ட நாட்டைக் குறிக்கின்றன. அது எந்த நாடு எது என்பதைக் கண்டுபிடியுங்கள்.

1. மேற்காசியாவிலுள்ள ஓர் அமீரக நாடு.

2. இதன் தலைநகர் தோஹா. நாணயம் ரியால்.

3. 1971-ல் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்ற நாடு.

4. இங்கு வருமான வரி கிடையாது.

5. பேரீட்சை முக்கியமான விளைபொருள்.

6. கைப்பந்து, கால்பந்து. டென்னிஸ் முக்கிய விளையாட்டுகள்.

7. பெட்ரோல் வளம் அதிகம்.

8. அல் தகிரா கிராம சதுப்பு நிலப் பகுதியில் அரிய மீன்களும் கடல் நத்தைகளும் காணப்படுகின்றன.

9. 2014-ல் ஹமாத் சர்வதேச விமான நிலையம் இங்கு தொடங்கப்பட்டது. உலகின் ஒன்பதாவது மிகப் பெரிய விமான நிலையம் இதுதான்.

10. 2022- ம் ஆண்டில் கால்பந்து உலகக் கோப்பை இங்கு நடக்க இருக்கிறது.

விடை: கத்தார்

SCROLL FOR NEXT