மாயா பஜார்

விடுகதை

செய்திப்பிரிவு

1. அந்தி சாயும் நேரம், அவள் வரும் நேரம். அது என்ன?

2. மண்ணுக்குள் இருக்கும். மங்கைக்கு அழகு தரும். அது என்ன?

3. இரவு பகல் பாராமல் உழைக்கும். படுத்தால் எழுப்ப ஆள் இல்லை. அது என்ன?

4. உடம்பெல்லாம் சிவப்பு. குடுமி மட்டும் பச்சை. அது என்ன?

5. ஓயாமல் இரையும், உருண்டோடிவரும். சில சமயம் சீறவும் செய்யும். அது என்ன?

6. சிறு தூசி விழுந்தால் குளமே கலங்கிவிடும். அது என்ன?

7. வேகமாகச் சுற்றினாலும் தலை சுற்றாது. அது என்ன?

8. கடலில் கலக்காத நீர். யாரும் குடிக்காத நீர். அது என்ன?

9. அடிமேல் அடி வாங்குவான். ஆனால், அனைவரையும் சொக்க வைப்பான். அவன் யார்?

10. கோட்டைக்குள் 32 காவலர்கள். அது என்ன?

11. மழை காலத்தில் பிறக்கும் குடை. அது என்ன?

- ஆர். பிரசன்ன குமார், 9-ம் வகுப்பு, ஆர்.சி. மேல்நிலைப் பள்ளி, திருச்சி.

விடைகள்:

1. நிலா 2. மஞ்சள் 3. இதயம் 4. தக்காளி 5. கடல் 6. கண் 7. மின்விசிறி 8. கண்ணீர் 9. மேளம் 10. வாய், பற்கள் 11. காளான்

SCROLL FOR NEXT