கீ
ழே உள்ள 10 குறிப்புகள் ஒரு குறிப்பிட்ட நாட்டைக் குறிக்கின்றன. அது எந்த நாடு என்பதைக் கண்டுபிடியுங்கள்.
1. மத்தியதரைக் கடலுக்குக் கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு தீவு நாடு.
2. துருக்கி இந்த நாட்டைத் தனது பகுதி என்று கூறியது உண்டு. பின்னர் தனி நாடாக ஏற்றுக்கொண்டது.
3. இதன் தலைநகரம் நிக்கோசியா. ஆட்சி மொழிகள் கிரேக்கம், துருக்கியம்.
4. ஐரோப்பாவின் மிகச் சுத்தமான கடற்கரைகள் இங்குள்ளன.
5. செம்பு, கல்நார், ஜிப்சம், மரம், உப்பு, மார்பிள் போன்றவை இயற்கை வளங்கள்.
6. எலுமிச்சை, பார்லி, திராட்சை, காய்கறிகள் அதிகம் விளைகின்றன.
7. சுற்றுலாவும் துணி ஏற்றுமதியும் முக்கியத் தொழில்கள்.
8. தேசியக் கொடியிலேயே இந்த நாட்டின் வரைபடமும் இருக்கிறது.
9. மிகக் குறைவான குற்றங்களே நடைபெறுவதால், உலகின் பாதுகாப்பான நாடுகளில் இதுவும் ஒன்று.
10. இங்குள்ள பாபோஸ் நகரத்தையே உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவித்திருக்கிறது யுனெஸ்கோ .
விடை: சைப்ரஸ்