புறாக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கின்றன. ஆர்டிக், அண்டார்டிக், சஹாரா பாலைவனம் தவிர, உலகம் முழுவதும் வாழ்கின்றன. இந்தியா, மலேஷியா, ஆஸ்திரேலியாவில் அதிக அளவில் காணப்படுகின்றன. அந்தக் காலத்தில் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குத் தகவல்களை அனுப்புவதற்குப் புறாக்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
புறாக்களை வைத்து பந்தயங்களும் நடத்தப்பட்டன. விதைகள், பழங்கள், தானியங்கள் போன்றவை இவற்றின் உணவு. கூட்டமாக வசிக்கக்கூடியவை. பெண் புறா முட்டைகளை இட்டு அடைகாக்கும். ஆணும் பெண்ணும் சேர்ந்து குஞ்சுகளைக் கவனித்துக்கொள்கின்றன.
புறாக்களைப் பற்றி இன்னும் சுவாரசியமான தகவல்களைச் சொல்ல வருகிறாள் பொம்மி.