கீ
ழே உள்ள 10 குறிப்புகள் ஒரு குறிப்பிட்ட நாட்டைக் குறிக்கின்றன. அந்த நாடு எது என்பதைக் கண்டுபிடியுங்கள்.
1. அரேபிய தீபகற்பத்தின் தென் கிழக்குப் பகுதியிலுள்ள நாடு.
2. இங்குள்ள பாஹ்லா என்ற நகரம் மண் பாண்டங்களுக்குப் புகழ் பெற்றது.
3. இதன் தலைநகர் மஸ்கட்.
4. இதை ஆளும் சுல்தான்தான் மத்திய கிழக்கு நாடுகளில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்பவராக இருக்கிறார். 1970 ஜூலை 23 அன்று தொடங்கிய ஆட்சி இன்றுவரை தொடர்கிறது.
5. இதன் அண்டை நாடுகள் பெட்ரோலியத்தை முக்கிய ஏற்றுமதியாகக் கொண்டிருந்தாலும் இந்த நாட்டின் முக்கிய ஏற்றுமதி மீன்கள், பேரீச்சம்பழங்கள், உலோகங்கள்.
6. குறுக்காக வைக்கப்பட்ட கத்திகள் இந்த நாட்டின் சின்னம்.
7. குற்றச் செயல்கள் மிகக் குறைவாக நடைபெறும் நாடு.
8. தலைசிறந்த கப்பல் கட்டுமான நிபுணர்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்.
9. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கு அதிகமாக வாழ்கின்றனர்.
10. இந்த நாட்டில் வருமானவரி வசூலிக்கப்படுவதில்லை.
விடை: ஒமான்