மாயா பஜார்

டிங்குவிடம் கேளுங்கள் - நமக்கு ஏன் வலிக்கிறது?

செய்திப்பிரிவு

அடிக்கடி எதிலாவது இடித்துக்கொள்கிறேன். ஓடும்போது தடுக்கி விழுகிறேன். இதனால் கை, கால்கள் வலித்துக்கொண்டே இருக்கின்றன. வலியே இல்லாவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்! நமக்கு ஏன் வலிக்கிறது, டிங்கு? - ஆர். நிர்மலா, 7-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, விழுப்புரம்.

வலி தெரியாவிட்டால் நன்றாகத்தான் இருக்கும் என்று தோன்றும். ஆனால், வலி தெரியாவிட்டால் நமக்கு அது நல்லதாக இருக்காது. உடலில் அடிபட்டு ரத்தம் வருகிறது. வலி தெரியாவிட்டால் ரத்தம் வெளியேறிக்கொண்டே இருக்கும். நீங்கள் அதைக் கவனிக்காவிட்டால் ஆபத்தாகிவிடும். ரத்தம் வருவதைக் கவனித்து, சிகிச்சை எடுத்துக்கொள்ள வலி தெரிய வேண்டும்.

அப்படித் தெரிந்தால்தான் உடனே அந்தப் பகுதியில் பிரச்சினை என்று, அதைச் சரி செய்வதற்கான முயற்சியில் இறங்குவீர்கள். உடலில் எந்த உறுப்பில் பிரச்சினை என்றாலும் உடனே மூளை நரம்புகளுக்குக் கட்டளையிட்டு, வலி மூலம் நமக்குத் தெரிய வைக்கிறது.

நாமும் தலைவலி, வயிற்றுவலி, மூட்டு வலி என்று வந்தவுடன் அதற்கு ஏற்ற மாதிரி சிகிச்சை எடுத்துக்கொள்கிறோம். இப்போது சொல்லுங்கள் நிர்மலா, வலி நல்லதுதானே? நீங்கள் கொஞ்சம் கவனமாக இருந்தால் இப்படி இடித்துக்கொள்ளவோ கீழே விழவோ மாட்டீர்கள்.

SCROLL FOR NEXT