கீழே உள்ள 10 குறிப்புகள் ஒரு குறிப்பிட்ட நாட்டைக் குறிக்கின்றன. அந்த நாடு எது என்பதைக் கண்டுபிடியுங்கள்.
1. வட ஐரோப்பாவிலுள்ள ஒரு தீவு நாடு.
2. நோர்டிக் (Nordic) நாடுகள் என்று அழைக்கப்படுபவற்றில் ஒன்று.
3. நாட்டின் மொத்தப் பரப்பில் 11% பனியால் சூழப்பட்டிருக்கிறது.
4. இது எரிமலைகளின் நாடு. 200 எரிமலைகள் உள்ளன. வெந்நீர் ஊற்றுகள் அதிகம்.
5. இங்கிருந்து ஏராளமான புத்தகங்களும் பத்திரிகைகளும் வெளிவருகின்றன.
6. இந்த நாட்டுக் கொடியில் இருக்கும் சிவப்பு எரிமலையையும் வெள்ளை பனியையும் நீலம் கடலையும் குறிக்கின்றன.
7. இந்த நாட்டின் வடக்கு பகுதியில் கோடைக் காலத்தில் 72 நாட்களுக்குச் சூரியன் மறைவதில்லை.
8. இலவசமாகக் கல்வி வழங்கப்படுகிறது.
9. இந்த நாட்டின் தலைநகர் ரெக்யவிக்.
10. ஆர்டிக் நரி, பனி மான், பஃபின் பறவை, கம்பளி ஆடு, திமிங்கிலம் போன்றவை இந்த நாட்டின் முக்கியமான உயிரினங்கள்.
விடை:- ஐஸ்லாந்து