கீழே உள்ள 10 குறிப்புகள் ஒரு குறிப்பிட்ட நாட்டைக் குறிக்கின்றன. அந்த நாடு எது என்பதைக் கண்டுபிடியுங்கள்.
1. ஐரோப்பிய நாடு.
2. இந்த நாட்டின் தேசிய மொழிதான் உலகிலேயே அதிகமாகப் பேசப்படும் இரண்டாவது மொழி.
3. இதன் தலைநகரமும் மிகப் பெரிய நகரமும் மாட்ரிட்.
4. இரண்டாவது பெரிய நகரமான பார்சிலோனாவில், 1992-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன.
5. அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளுக்கு அடுத்ததாக இந்த நாட்டுக்குதான் சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்கின்றனர்.
6. இந்த நாட்டைச் சேர்ந்தவர்தான் ஸ்டேப்ளரை கண்டுபிடித்தார். விண்வெளி வீரர்களின் உடைகளை முதலில் வடிவமைத்ததும் இந்த நாட்டினர்தான்.
7. கால்பந்து மிகப் பிரபலமான விளையாட்டு.
8. உலகின் மொத்த ஆலிவ் எண்ணெய் உற்பத்தியில் பாதிக்குமேல் இந்த நாட்டில்தான் தயாராகிறது.
9. ஆண்டு முழுவதும் இங்கே திருவிழாக்கள் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன.
10. புகழ்பெற்ற ஓவியர் பாப்லோ பிகாசோ இந்த நாட்டைச் சேர்ந்தவர்.
விடை: ஸ்பெயின்