மாயா பஜார்

தெய்வமே - குழந்தைப் பாடல்

செய்திப்பிரிவு

அன்னை போல உலகிலே

யார்தான் உண்டு வாழ்விலே,

அன்பைச் சொரிந்து வளர்த்துமே

அணைத்துச் செல்லும் தெய்வமே!

பெற்று வளர்க்கும் தந்தைதான்

பிள்ளை சிறப்பாய் விளங்கவே,

உற்ற கல்வி அளித்துமே

உயர்த்திக் காட்டும் தெய்வமே!

மொழி முதலாய் பாடங்கள்

முயன்று கற்று உயர்ந்திட,

அழியாக் கல்வி தந்திடும்

ஆசான் எல்லாம் தெய்வமே!

பெய்யும் மழையைப் போலவே,

பிறர்க்கு உதவி செய்யுவோம்,

தெய்வம் தொழுது வாழுவோம்

சிறந்து விளங்கி மகிழுவோம்!

- வ. ஆணையப்பன், புதூர், தூத்துக்குடி

SCROLL FOR NEXT