மாயா பஜார்

டொனால்ட் டக்

செய்திப்பிரிவு


வால்ட் டிஸ்னியால் உருவாக்கப்பட்ட பிரபலமான கார்ட்டூன் கதாபாத்திரங்களில் ஒன்று டொனால்ட் டக். மஞ்சள் வண்ண அலகும் கால்களும் கொண்ட வெள்ளை வாத்து. நீலச் சட்டையும் சிவப்புக் கழுத்துப் பட்டையும் நீலத் தொப்பியும் அணிந்திருக்கும். டொனால்ட் டக் அடிக்கடி கோபப்பட்டாலும் எல்லாருக்கும் பிடித்தமான கதாபாத்திரம்.

1914, மார்ச் 13 அன்று டொனால்ட் டக்கின் பிறந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. 1934 ஜூன் 9 அன்று டொனால்ட் டக் நடித்த முதல் திரைப்படம் ‘தி வைஸ் லிட்டில் ஹென்’ வெளிவந்தது.

டொனால்ட் டக் தனது புத்திசாலித்தனமான பேச்சு, குறும்பு, கோபம் போன்ற காரணங்களால் ஏராளமானவர்களின் உள்ளங்களைக் கவர்ந்திருக்கிறது. 2002ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 50 சிறந்த கார்ட்டூன் கதாபாத்திரங்களின் பட்டியலில் டொனால்ட் டக்கும் இடம்பிடித்திருக்கிறது.

டொனால்ட் டக்கின் தந்தை குவாக்மோர் டக், தாய் ஹார்டென்ஸ் மெக்டக். டெல்லா, தெல்மா டக் ஆகிய இரட்டைச் சகோதரிகளும் உண்டு.

இரண்டாம் உலகப் போரின்போது குறும்படங்களில் டொனால்ட் டக் இடம்பெற்றது. அதனால் போர்க்கால நட்சத்திரமாக டொனால்ட் டக் அறியப்படுகிறது.

கிளாரன்ஸ் நாஷ் 1934 முதல் 1983 வரை டொனால்ட் டக்குக்குக் குரல் கொடுப்பவராக இருந்தார். 1985க்குப் பிறகு டோனி அன்செல்மோ என்பவர் குரல் கொடுத்து வருகிறார்.

-ஆஷிகா குமார், பயிற்சி இதழாளர்

SCROLL FOR NEXT